சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 உழவு இயந்திரங்களுடன் 6 சாரதிகளும் கைது!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் 6 உழவு இயந்திர இழுவைப் பெட்டிகளுடன் அதன் சாரதிகள் 6 பேரும் கைது செய்யட்டிருப்பதாக மட்டக்களப்பு- பதுளை வீதி கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

Image result for சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 உழவு இயந்திரங்களுடன் 6 சாரதிகளும் கைது

 

நேற்று செவ்வாய்க்கிழமை 03 மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பெரியபுல்லுமலைப் பகுதியில் வைத்து இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்த விஷே‪ட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கிளையும் கரடியானறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த விடயமாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள கரடியனாறு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய உழவு இயந்திரங்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open

Close