யாழ்ப்பாணம் நல்லைக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இடம்பெற்று
வரும் நிலையில் கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, தூக்கு காவடி
எடுத்த பக்தர்கள் செட்டித் தெருச் சந்தியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.இம்முறை ஆலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால்
பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுத்து
வருகின்றனர்.3 தூக்குகாவடிகள் பருத்தித்துறை வீதி வழியாக வந்த நிலையில்,
முதலாவது தடையைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட போதும்,
செட்டித்தெருச் சந்தி அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலைத் தாண்டிச்
செல்ல அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதனால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மிகவும் கவலையுடன் முருகனை தரிசித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.