01/02/1998 அன்று அதிகாலை வேளையில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் தம்பலகாமத்தில் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் இடுகாடு 20ம் ஆண்டு நிறைவு நினைவேந்தலுக்காகத் த.தே.ம.முன்னணியினரால் தயார்படுத்தப்படுகின்றது.
பொது மக்கள் மற்றும் த.தே.ம.முன்னணியின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் பிரகலாதனின் மேற்பார்வையிலும் மாவட்ட செயலாளர் குகனின் நெறிப்படுத்தலிலும் இவ் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்வரும் 01/02/2019 அன்று மாலை 6 மணிக்கு இவ்விடத்தில் நினைவேந்தல் நடைபெறும் எனவும் அத் தருணத்தில் மக்களை நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறும் த.தே.ம.முன்னணியினர் அழைக்கின்றனர்.












