Sunday, December 8, 2019
  • தொடர்புகொள்ள
  • எம்மைப்பற்றி
தாகம்
  • முகப்பு
  • தாயகம்
    • தென்தாயகம்
    • வடதாயகம்
  • இலங்கை
  • தமிழகம்
  • பன்னாடு
  • கட்டுரைகள்
  • அறிவியல்
No Result
View All Result
  • முகப்பு
  • தாயகம்
    • தென்தாயகம்
    • வடதாயகம்
  • இலங்கை
  • தமிழகம்
  • பன்னாடு
  • கட்டுரைகள்
  • அறிவியல்
No Result
View All Result
தாகம்
No Result
View All Result

யாழ் மாநகர முதல்வருக்கும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

சங்கீதன் by சங்கீதன்
January 24, 2019
in தாயகம், வடதாயகம்
0
யாழ் மாநகர முதல்வருக்கும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் – தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் – இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பேர்கஸ் அல்ட் ஒபே (Head – South Asia Department and India co–ordinator) மற்றும் கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலரும், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் பவுல் கிறீன் ஆகியோருக்கிடையில் முதல்வர் அவர்களின் அலுவலகத்தில் நேற்று (23) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் குறித்தும் அதன் பிற்பாடான நிலைமைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் வினவியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மறுப்பு குறித்தும் அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஆட்சி மாற்றத்தினால் யாழ் மாநகரில் இடம்பெறவிருந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டதனையும், தற்போது அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? என்ற உயர்ஸ்தானிகரின் கேள்விக்கு ‘இல்லை. மிக நீண்ட காலமாக அரசியல் தீர்வை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்ற மக்களுக்கு இன்னும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. இத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விதமான முன்னெடுப்புக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

இதே சமயம் எதிர்வருகின்ற மார்ச் மாதம் இலங்கை குறித்து எவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்படும்? அரசியல் மாற்றங்கள் எவ்வாறு அமையும்? பெரும்பாண்மை இல்லாத இவ் அரசாங்கத்தினால் கொண்டுவந்திருக்கின்ற அரசியல் சாசன முன்மொழிவை எவ்வாறு 2/3 உடன் நிறைவேற்ற முடியும்? அல்லாது போனால் மக்களின் எதிர்பார்ப்பு இழவு காத்த கிளி போல ஆகிவிடுமா என்ற அச்சம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது’ என்றார்.

அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டடைப்பின் நிலைப்பாடுகளை முதல்வர் அவர்கள் விளக்கியிருந்ததுடன், உயர்ஸ்தானிகர் அவர்கள் தானும் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களை சந்தித்து மக்களின் விடயங்கள், அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

முதல்வரின் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் தமது ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்க தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.

இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன் அவர்கள், பிரதி ஆணையாளர் சீராளன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post

யாழ் இந்து கல்லூரியின் கால்கோள் விழா

Next Post

மலேசியாவில் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க முடிவு

Next Post

மலேசியாவில் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமீபத்தியவை

கூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

December 3, 2019
நான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி!

நான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி!

December 1, 2019

மாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்!!!

November 22, 2019

முகநூல்

  • தொடர்புகொள்ள
  • எம்மைப்பற்றி

© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.

No Result
View All Result

© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Cookie settingsACCEPT
Privacy & Cookies Policy

Privacy Overview

This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are as essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may have an effect on your browsing experience.

Privacy Overview

This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are as essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may have an effect on your browsing experience.

necessary Always Enabled

Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.

non-necessary

Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.

Open

Close